எங்களுக்கு உயிர் தந்து
காத்த அன்புத் தெய்வமே!
அப்பா நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றாலும்
எங்கள் நினைவில் எப்போதும் வாழ்கின்றீர்கள்
ஆயிரம் ஆண்டு தவம் இருந்தும்
கிடைக்கா உறவொன்று
இடை வழியில் சென்றதுவே!
வாழ வழிகாட்டிய தீபமொன்று
இடைவழியே ஒளி இழந்து நின்றதுவே!
மனம் பரிதவிக்க!
பிள்ளைகள் சோர்ந்து நிற்க!
உற்ற உறவும் உறைந்து நிற்க
எங்களை மறந்து எங்கே போனிர்கள்?
கண்ணில் அழுகை ஓயவில்லை எங்கள்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே அப்பா!
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எங்கள் குல விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் எங்களை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்.
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.