

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் குமாரவேள் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்று
ஆண்டுகள் பத்து கடந்தாலும்
அழியவில்லை உன் நினைவுகள்
அகலவில்லை உன் அன்புமுகம்!
நாட்கள் தினம் நகர்ந்து போகும்
காணியாற்றில் நீ நட்டமரம் கூட
ஒரு நாள் பட்டுப் போகும்
எங்கள் இளமையும் முதுமையாய் வளர்ந்து போகும்
ஆனால் உன் நினைவுகள் மட்டும்
எப்போதும் எங்களின் இளமையாய் செழித்திருக்கும்
தூரத்தில் இருந்தாலும் மனதாலே
ஒன்றி வாழ்ந்தோமே சகோதரா!
உன் அன்பான பேச்சிற்கும் சிறு
சிரிப்பிற்கும் ஏங்கி நிற்கின்றோம் சகோதரா!
நித்தம் உனைத்தேடி சித்தம் துடிக்கிறது
திக்கற்று நிற்கின்றோம் திரும்பி வரமாட்டாயா?
கனவினிலே உன் உருவம்
கதைகளிலே உன் வார்த்தை
பசுமை நிறைந்த உறவை விட்டு
போனதெங்கே! போனதெங்கே!
உன் மனைவி கதறியழ பிள்ளைகள் கலங்கிட
உன் சகோதரி துடி துடிக்க
உன் சகோதரர்கள் கண்ணீர் மல்க
மைத்துனர்கள் விம்மி அழ
நீ காலனிடம் சென்றாயோ!
உன் நினைவில் வாடும்
குடும்பத்தினர்....!
திரு குமாரவேல் குடும்பத்தார்க்கு, உங்கள் இழப்பு மிகப்பெரியது. எங்கள் உண்மையான பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எம்பெருமான் சிவபெருமானின் அருளால் அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும்....