2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்ரமணியம் உமாமகேஸ்வரன்
கொழும்பு இசிப்பத்தானா கல்லூரியின் பழைய மாணவர்
வயது 71
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்ரமணியம் உமாமகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறைவா நீ எனக்கு கொடுத்த
இவ் வாழ்க்கை துணைக்காக நன்றி
எத்தனையோ சோதனை மத்தியிலும்
எங்களை வழிகாட்டியதற்காக நன்றி
எந்நிலையிலும் தன்னை தாழ்த்தி
பிறருக்கு உதவும் பண்புக்காக நன்றி
இம்மனிதரை ஈன்றெடுத்த பெற்றோருக்காக நன்றி
இத்தனை உடம்பு உபாதையிலும்
தன் இயல்பு மாறாத புன்னகையால் தன்னை
சுற்றியுள்ளவர்களை களிப்பாக வைத்திருந்த
அன்பானவருக்காக நன்றி
இனிமேலும் அவரை உபாதையால் வருந்தாமல்
உன்னிடம் அழைத்தற்காய் நன்றி
ஆண்டவர் கொடுத்த பொக்கிஷம் நீ
என்னுடன் வாழ்ந்த காலங்களை மாத்திரமல்ல
என்னை பிரிந்தாலும் அவரின் மடியில்
பாதுகாப்பாய் இருக்கின்றாய் அது போதும் எனக்கு
தகவல்:
எவ்விலின் ரஞ்சினி(மனைவி)