எங்கள் ஊரில், என் வீட்டுக்கு அருகில் வாழ்ந்த அன்பும் பாசமும் நிறைந்தவராக என்னை தங்கள் தம்பி போல் கருதி நேசித்த ராதி அக்கா, இன்று நம்மிடமிருந்து பிரிந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரும், அவருடைய இரு சகோதரிகளும் என்னிடம் காட்டிய அன்பும் மனிதநேயமும் இன்றும் என் நினைவுகளில் உயிருடன் உள்ளது. 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது அவர்களது வீட்டில் பீரங்கி குண்டு விழுந்த நாளில், உயிரைக் காக்கும் பொருட்டு ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பிரிவுக்குப் பிறகு அவர்களை மீண்டும் சந்திக்க முடியாதது இன்றும் மனதில் ஒரு வலியாக உள்ளது. இன்று அவருடைய மறைவு செய்தி பழைய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து மனதை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்துகிறது. ராதி அக்காவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து துயருறும் அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Words may not enough to express the heartfelt sorrow that I feel for this great loss and I will remember the last birthday we spend together unexpectedly. May her Soul Rest in Peace.