யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுபா சிவேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நேற்றுவரை எம்மோடு இருந்தாய்
காற்றோடு கலந்து கனவாகிப்போய்
மாதம் ஒன்று வந்தும் ஆறமுடியவில்லை!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகியவளே
உந்தன் பிரிவால் இன்றும்
நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும்
எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய்
எங்களை கொல்கிறது
உன்னழகு
வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி
நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா
வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை
நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Words may not enough to express the heartfelt sorrow that I feel for this great loss and I will remember the last birthday we spend together unexpectedly. May her Soul Rest in Peace.