யாழ். கொக்குவில் கிழக்கு மணியகாரன் லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சிறிதரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளிவிளக்காய் மிளிர்ந்த எம் தலைவனே! அப்பா!
அப்பா! நீங்கள் அமரத்துவம் அடைந்து ஆண்டு மூன்று ஆனாலும்
இன்றும் எங்கள் கண்ணுக்குள் நிறைந்து நிற்கின்றீர்கள்
ஆலமரம்போல் எமை தாங்கி நின்றீர்கள் அந்த நிழலில் ஆனந்தமாய் நாம் இருந்தோம்
ஒன்றுக்கும் கலங்கவில்லை உற்றதுணையாய் இருந்தபோது
கனவிலும் நினைக்காத நேரத்தில் துயர்வந்து சேர்ந்ததால்
உருக்கும் உங்கள் ஞாபகங்களுடன் காலங்கள் கடந்து போகின்றன
மறக்க முடியாத பயணம், மனேதோடுபோராடும் மறையாத ஞாபகங்கள்
கூடிவாழ்ந்த நாட்கள் எல்லாம் நேற்றுப்போல் இருக்க
நீங்காத நினைவுகளை எம்மிடத்தில் பதித்து விட்டு
மண்ணை விட்டு மறைந்து விட்டீர்கள்
அப்பா நீங்கள் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும்
உங்கள் ஆசி என்றும் எமக்கு உற்றதுணையாக இருக்கும்
என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிப்போம்
உங்கள் ஆத்மா இறைவன் திருவடியில்
நிம்மதியாக
சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.
We lost a hard to find a friend like Sritharan. We don't know when we can find a friend like him again. His memories will remain with us for ever.