யாழ். கொக்குவில் கிழக்கு மணியகாரன் லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சிறிதரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வளமான வாழ்வுக்கு ஒளிதந்த அப்பாவே!
உங்கள் நினைவுகள் நித்தமும் வாட்ட இழப்பை ஏற்க முடியவில்லையே
பார்க்கும் இடமெல்லாம் உங்கள் அன்புருவம் தெரியுதப்பா
பார் அதனில் இல்லையென எண்ண இன்னும் மனம் மறுக்குதப்பா
கனிவுடனே அழைக்கும் குரல் காதினிலே கேட்குதப்பா
கட்டி அணைத்து துணைநின்ற நாட்கள் எல்லாம் கனவாகி போனதப்பா
காலை விடிகின்ற வேளைஎல்லாம் கண் எதிரே உங்கள் தோற்றம்
அந்தி பகல் வந்தாலே மனதினிலே போராட்டம் வீட்டில்
காணும் பொருள் எல்லாம் கைப்பட்ட அடையாளம்
காணாமல் தவிக்கின்றோம் உங்களின் ஓயாத நடமாட்டாம்
துன்பம், துயரம் தெரியாமல் எம்மைக் காத்து நின்றீர்கள்
உங்கள் பக்கத்தில் இருக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டோம்
நினைவில் எங்களுடனும் நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆத்மா நிம்மதியாக சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்🪔🙏🙏🙏