யாழ். கொக்குவில் கிழக்கு மணியகாரன் லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சிறிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-10-2023
அதிகாலையிலே விழித்தெழும் எங்கள் அப்பா
என்னும் இல்லத்து சூரியன் ஆழ்ந்து உறங்கி
வருடம் ஒன்று ஆகிறது
இன்னும் நம்பவே முடியவில்லை
அப்பா நீங்கள் எம் அருகில் இல்லை என்று.
அன்பொழுக அழைத்து ஆசையாய் அரவணைத்து,
அறிவுதனைப்புகட்டி, ஆனந்தமாய் நாம்வாழ
உங்களையே அர்ப்பணித்து,
இன்பமாய் நாம் இணைந்து,
மகிழ்ந்திருக்கும் வேளையிலே
பாசப் பிணைப்பறுத்து
பறித்துத்தான் எடுத்துவிட்டான்.
துன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தோமே
எங்கள் சுமைதாங்கி மறைந்ததனால் துயரத்தில் மூழ்கினோமே
குடும்பம் என்றகோவிலின் குலவிளக்கு
அணைந்ததனால் எங்கள் இல்லத்தில்
ஒளி இழந்து போனோமே!
இல்வாழ்க்கை என்னும் பயணத்திற்கு வரமாக
வாய்த்தீங்கள்
நிழல்போலே உங்களை பின்தொடர்ந்த
நாட்களெல்லாம் இப்போ
நினைவாக மீட்கையிலே
வருந்துதே என் மனசு நிறையுதே என் விழிகள்
அருகருகே அமர்ந்திருந்து பேசிய நாட்களெல்லாம் இப்போ
மௌனமாய் ஓசையின்றி மனவலியாய் நோகின்றதே!
நித்தம் விளக்கேற்றி நெஞ்சுருக வேண்டியதால்
பக்குவமாகவே இறையடி சேர்ந்த திதியில்
ஆத்மசாந்தி பூஜை செய்து அஞ்சலியை செலுத்துகிறோம்
உங்கள் ஆசியினை வேண்டுகின்றோம்
அவனியில் நாம் வாழும்வரை
சிந்தனையிலும், செயலிலும் எங்கள் உயர்வான
வாழ்விற்காகவே தன்னை
அர்ப்பணித்த
எங்கள் அன்புத் தெய்வத்தின் இறுதிமூச்சு
அடங்கும்வரை
அருகில் இருக்கும் வரம் தந்த
இறை அருளின் கருணைக்கு நன்றிகூறி,
அவன் திருவடியில் ஆத்மா நிம்மதியாக சாந்தி
அடைய நித்தமும் பிரார்த்திக்கின்றோம்...
We lost a hard to find a friend like Sritharan. We don't know when we can find a friend like him again. His memories will remain with us for ever.