

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள்
உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்களருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி எங்கள்
கண்கள் களைத்ததடா.....!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உன் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
இன்னும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உன் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம் நாங்கள்..!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் எட்டாண்டுகள்
முடிந்தாலும்
உன் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
நீ எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை எமது மனது
ஆண்டுகள்
பல கோடி சென்றாலும்
ஆறாது நம் நினைவுகள்..!
மென்மையாய் பேசுபவரே !
பணிவினைக் கற்பித்தவரே !
அன்பு ஒன்றை வாடகையாய்க் கொடுத்து
எங்கள் நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று
நேரம் தவறாமை
கடுஞ்சொல் கூறாமை
இறைவனை இகழாமை
நன்றி மறவாமை
பகைமையைத் தொடராமை..
அனைத்தையும் கற்பித்தாய்!
உதவி புரிவதற்கு நீ என்றும் சிந்தித்தவனில்லை
உனக்கு உபத்திரம் செய்ததை நினைப்பதுமில்லை
ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?
விரைந்து உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டானே!!!
கண்ணீரால் கண்னீர் அஞ்சலி
செலுத்தும்
உன் அன்பு உறவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!