யாழ். உடுவில் மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் பழம் றோட் வீரபத்திர கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் தசாகாதி கிரியைகள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு(தசாகம்), 03-08-2020 திங்கட்கிழமை அன்று(ஏகோதிஷ்டம் மாசிகம்), 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று(சபிண்டீகரணம்) ஆகியன நடைபெறும். அதனை தொடர்ந்து 05-08-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு இடம்பெறும் (கிருஹயக்ஞம்) மதியபோசன நிகழ்விலும் கலந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.