

யாழ். உடுவில் மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் பழம் றோட் வீரபத்திர கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உடுவிலைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி தேவஸ்தான ஆதீனகுரு சிவஸ்ரீ சிவகடாட்சக்குருக்கள், விசாலாட்சிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோப்பாய் சிவசாமி ஐயர்(முன்னாள் பூசகர்- இருபாலை பிள்ளையார் கோவில்) சரஸ்வதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஸ்ரீ ஜோதீந்திரக்குருக்கள்(முன்னாள் பிரதம குரு- யாழ். வண்ணை கன்னாதிட்டி காளிகாம்பாள் தேவஸ்தானம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கானசரஸ்வதி(லண்டன்), ஹிமசுதா, கானப்பிரியா(ஆசிரியை- யா/மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பழை), சிவராமசர்மா(சட்டத்தரணி, HNB யாழ் பிராந்திய அலுவலகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வேதரூபக்குருக்கள்(சிவசக்தி ஜோதிடம்- லண்டன்), சிவசங்கரக்குருக்கள்(ஆசிரியர்- யாழ்/இந்துக் கல்லூரி, பிரதம குரு, மயிலணி முத்துமாரியம்மன் கோவில்), மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வாகீஸ்வரிஅம்மா, உடுவிலைச் சேர்ந்த முத்துச்சாமிக்குருக்கள், பாலசுப்பிரமணியக்குருக்கள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவீந்திரசர்மா, காலஞ்சென்ற சிவேந்திரசர்மா மற்றும் விஜயேந்திரசர்மா, பவானிஅம்மா ஆகியோரின் அன்பு அண்ணியும்,
ஜனசோபினி, ஜனசுகனி, ஜனஅபிதன்(லண்டன்), சிவதன்ய சர்மா, ஸ்ரீதன்யா, சர்மிஷ்டா, அபிஜித் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2020 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் “சரஸ்வதிவாசம்” வீரபத்திர கோவிலடி கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.