9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சூசைப்பிள்ளை மரியதாசன்
(அருமை)
வயது 76
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மரியதாசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தி்ன் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்!
ஒன்பது ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகுவர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியதாய்
சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டி வைத்தவரே
நீங்கள் சென்றது எங்கென்று
சொல்லாமல் ஏன் சென்றீர்கள்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
ஜோசப் ஸ்டீபன் (நிமால்- மகன்)