யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மரியதாசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அருமை என நாமம் பூண்டு
அருமையாய் வாழ்வில் பல
புதுமைகள் சமைத்து
வந்தவன் போனவன் யாவரையும்
அடே ராசா எடி ராசாத்தி என
உள் அன்போடு விழித்து
எதையும் சலிக்காமல் வீறாப்புடன்
சிரம் ஏற்று நடப்பித்த
நிகழ்வுகள் நிஜ உலகில்
தன்னகரற்ற தனயனின் உயிர்ப்பினை
கோடிட்டு நிற்கின்றன
உத்தம வாழ்வுக்கு இலக்கணமாய்
ஜெப வாழ்வினை அப்பட்டமாய் நம்பினவனாய்
சோபித்த வாழ்வுக்கு சோரம் போகாதவனாய்
இறுதி மூச்சுவரை வறுத்தெடுத்த தமிழை
வாழ வைத்தவனாய்
கூடி அழவேண்டாம் என
நிழல்கள் பல வித்திட்டவனாய்
நீண்ட பயணத்திலும் கண்ணியமாக
விடை பெற்றாயோ
காவியமாய் கரைந்துவிட்ட
எம் நினைவுகளில்
குடும்பத்தின் ஒளிவிளக்காய்
மிளிர்ந்த எம் தலைவனே
அறிவூட்டி சீராட்டி வளர்த்த
தந்தையே! அன்பான அறிவு தந்து
பொன்னான வாழ்வுதனை போற்றி
வளர்த்த பிதாவே! கூடிக் குலம்
மகிழ்ந்து நேசமுடன் விடைபெற்று
ஆண்டுகள் ஐந்து கழிந்த போதும்
மறப்போமோ உங்களை எம் வாழ்வில்
இஞ்சரப்பா அப்பா, கிராண்பா அங்கிள்,
அருமை ஏடே, அருமை குலம் பெறும் பெருமை...