யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மரியதாசன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு எட்டு ஆனாலும் மனம் ஆற மறுக்கிறதுசிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்செம்மையாய் வாழ்ந்த அப்பா!
ஆண்டு எட்டு கடந்தாலும் ஆறிடுமோஉங்கள் நினைவலைகள் அப்பா!கண்ணின் மணி போல் எம்மைக் காத்தஅன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர்விதியதால் விண்ணகம்சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !நேசத்துடன் எங்களை ஆளாக்கிநேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.