Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 14 FEB 1937
மறைவு 25 SEP 2024
அமரர் சூசைப்பிள்ளை பெனடிக்ற் (சிறில்)
உரிமையாளர்-லைடன் ரெக்ஸ்ரைல் சென்ரர், யாழ்ப்பாணம், முன்னாள் உரிமையாளர்-நிகம்பு பார்மசி, முன்னாள் பங்காளர்-சிற்றி ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ் நீர்கொழும்பு, Crowns, நீர்கொழும்பு, முன்னாள் பங்காளர், Jaffna Pharmacy
வயது 87
அமரர் சூசைப்பிள்ளை பெனடிக்ற் 1937 - 2024 கரம்பொன் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை பெனடிக்ற் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

துன்பங்கள் சோதனைகள் பல வந்தபோதும்
அவற்றை மநோதையிரித்துடம் எதிர் கொண்டார்,
தனது கடைசி வயோதிப காலம் வரை
தனது தொழில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்..

 
இரண்டாண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
ஆறாது அப்பா உம் நினைவுக் தழும்பு!
 யாழ் லைடன் ரெக்ஸ்ரைல் சென்ரரை
உழைப்பால் உயர்த்தி நின்ற நேர்மையின் வடிவம்!

நிகம்பு பார்மசியின் அதிபராய்
நீர் செய்த சேவைகள் என்றும் நிலைத்திருக்கும்!
 சிற்றி ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ் பங்காளராய்
நீர்கொழும்பில் தடம் பதித்த தெய்வமப்பா!

நீர்கொழும்பு Crowns நிறுவனத்தின் நாயகனே,
 பெரு வணிகத்தின் பேராசானே!
 Jaffna Pharmacy பங்காளராய் வாழ்ந்து
வான்புகழ் கொண்ட மாமனிதரே!

வலது கை தருவதை இடது கை அறியாமல்
வாரி வழங்கிய வள்ளலப்பா!
 ஏழை எளியோர் துயர் தீர்த்த கருணை மனமே,
உங்கள் கொடைக்கு நிகரேது!

உழைப்பையும் நேர்மையும் மூச்சாகக் கொண்டு
வாழ்ந்து காட்டிய கலங்கரை விளக்கமே!
 அன்பையும் பாசத்தையும் அள்ளித் தந்த
உலகின் சிறந்த எங்கள் தந்தையே!

வழிகாட்டியாய் எம் முன்னே சென்று
நல்வழி காட்டிய தியாக தீபமே!
 உம்மைப் போன்ற நல்லதொரு தகப்பனைப் பெற
நாம் செய்த மாதவம்தான் என்னே!

நீர் விதைத்துச் சென்ற நற்பண்புகள்
 என்றும் எங்கள் வாழ்வின் ஒளியாய் விளங்கும்!
 பிரிவினால் வாடும் குடும்பத்தின் கண்ணீர்த்
துளிகளால் உமக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்!

அன்பின் உருவமே அப்பா!
நீர் இறைவனின் நிழலில் என்றென்றும்
அமைதி கொள்ளப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos