1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சூசைப்பிள்ளை பெனடிக்ற்
(சிறில்)
உரிமையாளர்-லைடன் ரெக்ஸ்ரைல் சென்ரர், யாழ்ப்பாணம், முன்னாள் உரிமையாளர்-நிகம்பு பார்மசி, முன்னாள் பங்காளர்-சிற்றி ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ் நீர்கொழும்பு, Crowns, நீர்கொழும்பு, முன்னாள் பங்காளர், Jaffna Pharmacy
வயது 87
அமரர் சூசைப்பிள்ளை பெனடிக்ற்
1937 -
2024
கரம்பொன் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை பெனடிக்ற் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதப்பா
ஆறவில்லை எம் துயரம்
மீண்டெழுந்து வந்திடப்பா
மீழா துயர் துடைத்திடப்பா
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!
ஆற்றாது கண்ணீர் அழுது புலம்புகின்றோம்
ஓராண்டு மறைந்தாலும் பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை மலர் தூவி என்றும் உங்கள்
மலர்ப் பாதம் வணங்குகிறோம்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்