
அமரர் சோமசுந்தரம் கிருபாகரன்
முன்னாள் புத்தளம் சீமெந்து கூட்டுத்தாபன கொள்வனவு முகாமையாளர்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காலம்சென்ற திரு சோமசுந்தரம் கிருபாகரன் அவர்களை நினைவு கூறுவதுடன், அவரின் குடும்பத்தாருடன் அவர்களின் துக்கத்திலும் நாம் பங்குபெற்று, அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் நான் பொறியியலாளராக குறுகிய காலம் வேலை செய்தாலும், அந்த காலத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்ததுடன், அவரின் புத்தள வீட்டிற்கு பல தடவை சென்றது மட்டும் அல்ல, அந்த கால கட்டத்தில் ஏற்பட்ட சில சூழல்களால் அவர் வீட்டில் மற்றும் சக ஒன்று இரண்டு பொறியியலாளருடன் மிக குறுகிய காலம் தங்கியும் இருந்துள்ளோம். எம்மை அணைத்து உபசரித்த அந்த நல்ல உள்ளத்தையும் அவரின் மனைவியையும் நாம் என்றும் மறக்கவில்லை. மார்கழி, 2021 யிலும் அவருடன் கடைசியாக கதைத்துள்ளேன்.
என்றும் எம் மனதில் இருந்து நீங்காத அவருக்கு நாம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறோம் !!
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக!