பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதிவிலக்கா? இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? உங்கள் மரணச் செய்தி வந்த போது கொஞ்சக் காலம் பிந்தி இருக்க கூடதா என்று மனம் துடித்தது நாங்கள் உங்களை எங்கு பார்த்தாலும் எங்கள் தந்தையை ஞாபகப் படுத்துவீர்கள் மாமா நீங்களும் எங்கள் தந்தையும் செல்லையாதீவு அம்மன் கோவிலில் நிற்பதும் சாமி தூக்குவதும் எங்கள் கண்முன்னே வந்து செல்கிறது எப்போது பூநகரி போனாலும் உங்களை எங்காவது பார்ப்போம் இப்போது நீங்கா நினைவுகளைத் தந்து மீளாத்துயில் கொள்கின்றீர்கள் மாமா எங்கள் தந்தை போல வெகு சீக்கிரம் எங்கே சென்றீர்கள் உங்கள் பிரிவால் துயரும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினருக்கும் உங்கள் மச்சான் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!! பாலசுப்பிரமணியம்( கனேஸ்) குடும்பம் கிளிநொச்சி, ஜெர்மனி SBS சுகந்தன்
Deepest sympathy.