31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 22 JUN 1955
விண்ணில் 22 MAY 2021
திரு சொக்கலிங்கம் புஸ்பராஜா (றசனா)
வயது 65
திரு சொக்கலிங்கம் புஸ்பராஜா 1955 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் புஸ்பராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

பொய் எல்லாம் ஒன்றாய் பொருத்தி வைத்த
 பொய்யுடலை மெய்யென்றால் மெய்யாய் விடுமோ பராபரமே
 நீண்ட பிரபஞ்சத்தின் நிலையில்லா வாழ்வுதனை
 வேண்டாம் என விட்டெறிந்து எங்கே ஏகினாய் எம் அப்பாவே

தகப்பா என்ற தத்துவத்தின் பொருள் நீ
 நீயின்றி எம்வாழ்வு நிம்மதியாய் நகர்ந்திடுமா ??
 அப்பாவாய் அன்புத்தோழனாய் உற்றகணவனாய்
உயிராகி நின்றவரே உறங்கிப்போனதேன்.
 
எம் உயிர்கள் வலிக்கிறதே
உணர்வெல்லாம் சாகிறதே
 தேடுமிடமெல்லாம் தெய்வமாய் நின்றவரே
தேடித் தேடி களைக்கின்றோம்
எம் தெய்வத்தை காணாமல்.
 எம் ஜென்மங்கள் இருக்குமெனின்
 ஜென்மஜென்மமாய் நீ வேணும் எம் அப்பாவே.

திடீரென எம்மையெல்லாம் தவிக்கவிட்டு இறைவன் பாதம் பற்றிய எம் அப்பாவின் மரண செய்தி அறிந்து நேரில் வந்து ஆறுதல் சொன்ன அனைவருக்கும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆறுதல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும், அவரின் கடைசி யாத்திரையில் எம்மோடு கைகோர்த்த அனைத்து உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 19-06-2021 சனிக்கிழமை அன்று நடைபெற்று, வீட்டுக்கிருத்தியம் 21-06-2021 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தொடர்ந்து 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று வணக்க நிகழ்வும் அதனைத்தொடர்ந்து மதிய போசனமும் Sri Kamadchi Amman Aalayam, 36 Avenue de la Division Leclerc, 93000 Bobigny, France எனும் இடத்தில் நடைபெறுவதால் அன்புடன் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்