Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 NOV 1943
மறைவு 22 FEB 2024
அமரர் கௌசாம்பிகை சொக்கலிங்கம்
வயது 80
அமரர் கௌசாம்பிகை சொக்கலிங்கம் 1943 - 2024 வேலணை 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், கனடா toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கௌசாம்பிகை சொக்கலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 01-03-2026

அன்பால் எமை ஆண்ட அன்னையே 
அன்றொரு நாள் ஒரு வார்த்தை
 சொல்லாமல் எமை விட்டுப் பிரிந்து
 போய் இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆனதா...

இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் 
ஏதும் இல்லாமல் உங்கள் மலர்ந்த
முகத்துடன் எங்களை உங்கள் கண் 
இமைக்குள் வைத்து நாம் வாழ வழி
 அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!

அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து 
நல்ல பண்பைச் சுமந்து ஈடில்லாப் 
பாசம் சுமந்து நீங்கள் எமக்களித்த 
இன்பமெல்லாம் நினைத்து 
முடிக்குமுன்பே நிர்மூலமானதென்ன?

ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
 மீளாத்துயில் கொண்ட எம் அன்புத் தாயே
 உங்கள் ஆத்மா சாந்தி அடைய 
தினமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
..

தகவல்: குடும்பத்தினர்