Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 NOV 1943
மறைவு 22 FEB 2024
அமரர் கௌசாம்பிகை சொக்கலிங்கம்
வயது 80
அமரர் கௌசாம்பிகை சொக்கலிங்கம் 1943 - 2024 வேலணை 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், கனடா toronto ஐ வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த கௌசாம்பிகை சொக்கலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 12-03-2025

எங்கள் எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத தீச்சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கும்- தெய்வமே!

காதவழி தூரமெல்லாம் கால் கடுக்க
நடந்தாலும் தேடாத இடமெல்லாம் தேடி
நாம் திரிந்தாலும் காணவில்லை
உங்களைப் போல துணை தனை!

அறிவூட்டி சீராட்டி வளர்த்த அம்மாவே!
அன்பும் அறிவும் பாசமும் தந்து
அரவணைத்து மகிழ்ந்தாயே பொன்னான
வாழ்வுதனை போற்றி வளர்த்த அம்மாவே!

உங்களோடு மட்டுமல்ல உங்கள்
நினைவுகளோடும் நாம் வாழ்ந்த
நாட்களை யார் மறப்பார்!

ஆண்டு ஒன்று சென்றுவிட்டது- ஆனாலும்
உங்கள் அன்பும் அரவணைப்பும் என்றும்
எம்மை வழி நடாத்தி வாழ வைக்கும்
என்றும் உங்கள் ஆசியுடன் நாம் தொடருவோம்…

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், சகோதரங்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்....

தகவல்: குடும்பத்தினர்