யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவதாசன் குருபரன் அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பராசக்தி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பேரின்பகாந்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவதாசன் வசந்தமலர்ச்செல்வி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சரண்யா, இலக்கணா, சுவாதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மனோகரன், காலஞ்சென்ற மகேஸ்வரன், அருள்ராசா, கிருபாகரன், மதிரூபன், காலஞ்சென்ற சிவலோகநாதன், வடிவேல், ஞானவதி, காலஞ்சென்ற சரஸ்வதி, சிவமதி, மஞ்சுளாதேவி, தயாநிதி, கலைச்செல்வி, புஷ்பலதாச்செல்வி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
மனோரஞ்சினி, வையந்திமாலா, காலஞ்சென்ற சிவராமலிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
உடன்பிறவா உறவினர்களின் அன்பிற்குரியவரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் ஜெயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு 03-08-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல. 248/43,
ஆட்டுப்பட்டித் தெரு,
கொழும்பு-13.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
இழப்பில் தவிக்கும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்