

காலனவன் எழுதிய கணக்கை கணப்பொழுதில் முடித்துவிட்டான் உங்கள் உயிர் இங்கு இருக்க உடல் மட்டும் கானல் நீர் ஆகியதோ உங்கள் உறவுகள் இங்கே ஓலம் இட காது கேளாதோர் போல இருப்பது தான் ஏனோ? உங்கள் கைகள் துடிக்கவில்லையா?! எங்கள் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என தோன்றவில்லையா?! நாங்கள் அசந்த நேரம் பார்த்து ஏமாற்றி சென்றுவிட்டீர்களே யார் எங்களுக்கு ஆறுதல் சொல்வது? அழுது கரையும் எங்களை அள்ளி அரவணைத்து கொள்ள உங்கள் அன்பான கரங்களை தேடுகின்றோம் பெரியப்பா ஊரெங்கும் கரைபுரண்டோடும் வெள்ள நீரோடு எங்கள் கண்ணீரூம் கரைபுரண்டோடுகிறது. மண் விட்டு நீங்கள் விண்ணோக்கி சென்றாலும் எங்கள் கண் விட்டு நீங்காமல் என்றும் எங்கள் உள்ளத்தில் வைத்து தினமும் வணங்குகிறோம்! என்றும் எங்கள் நெஞ்சில் நீங்கா நினைவுகளுடன்!