Clicky

பிறப்பு 13 JUL 1949
இறப்பு 22 FEB 2019
அமரர் சிவசுப்ரமணியம் சிவகுமாரன் (Neuss Bobby)
வயது 69
அமரர் சிவசுப்ரமணியம் சிவகுமாரன் 1949 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 28 FEB 2019 Swaziland

சிவசுப்பிரமணியம் சிவகுமாரன் ( - ) ?????????? “கடமையை செய் பலனை எதிர்பாராதே” - என்ற வாக்கை மெய்பித்தவரே உம் வீட்டில் பிறந்த 2ம் சிற்பத்தை தினம் தோறும் சலிக்காமல் செதுக்கிய சிற்பியையா அதிலும் திருப்தியுறா உம் மன அங்கலாய்ப்பை கண்ணுற்ற ஆண்டரும் நீர் பெற்ற தலைமகளை தாரமாக்கினான் - உம் ஏக்கம் தீர்ப்பதற்காய் 17 வருடமாக தான் செய்யும் சேவைகளை தன்னகத்தே கொண்டவனை உம் உயிரணுவில் கருவான மங்கையவள் கரம்பற்றிய காலத்தில் உருப்பெற வைத்ததுவே "விது நம்பிக்கை நிதியம்" ஐயா அறியாது போட்ட விதை முளைத்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம் விதை இங்கே துளிர்விட்டு கிளைவிட்டு விருட்சமாய் நிக்குதையா இவையெல்லாம் ஏதோ சங்கிலி தொடர் போல பின்னிப்பிணைந்து முன்நகர ஐ மூன்று வருடங்கள் நம் சேவை கடந்ததை முதன்முதலாய் கொண்டாட ரகசியமாய் திட்டமிட்டோம் - அதில் உமக்கான கௌரவத்தை எவ்வாறளிப்பதென்று பலவிதமாய் எண்ணினோமே எம் எண்ணம் புரிந்ததுவே உமக்கு ஏன் எனக்கு இதுவெல்லாம்? வந்த வேலை முடிந்ததென்று எமைவிட்டு போனீரோ எம் மூச்சு அடங்கும்வரை நாம் ஏற்ற கடமை தனை கருத்துடனே செய்திடுவோம் ஓடி களைத்த உயிர் சென்ற இடத்தில் நிம்மதியாய் ஓய்வெடுக்கட்டும் “பிறவி பெருங்கடல் நீந்துவார் - நீந்தார் இறைவனடி சேராதார்” ?????????????????????????? உம் யாத்திரையில் விது நம்பிக்கை நிதிய அறங்காவலர்கள் இராஜரட்ணம். ராஜ்-விதுரன் ஷிமாறி. ராஜ்-விதுரன் சிவகுமாரன். ஷைலன் யோகராசா. மோகன் லேக்கா. பாறம் யோகராஜா. பகி செல்வராஜா. டற்றோ நாகேந்திரம். விஜிதா நாகேந்திரன். பார்த்தீபன் மற்றும் விது நம்பிக்கை நிதிய உறுப்பினர்கள்