வைரமுத்து பரம்பரையின் தலைக்கொப்பு சாய்ந்ததுவோ?? அதை என் மனம் ஏற்க மறுக்கின்றது?? என் அன்புக்குரிய பெரியத்தை உந்தன் மரணச்செய்தி கேட்டு அது பொய்யாய் இருக்குமோ என நான் குழம்பிய தருணங்களில் ! உங்கள் ஞாபகங்கள் சிந்தையில் வருடி சென்றன... அன்பு பெரிய அத்தை வீடியோ கோலில் ஒவ்வொரு நாளும் மறக்காமல் தொடர்பு கொள்வீர்கள். .. உங்கள் அழைப்பை நான் அசட்டை செய்த போதும் மறுதரம் அழைத்து என் சுக துக்கங்களை விசாரிப்பீர்கள்??? எனது அம்மா விடுமுறைக்காக வேறுநாடு சென்ற தருணங்களில் என் அத்தை நீங்கள் என்ன சாப்பிட்டாய்? என்ன செய்கிறாய் ? என தினம் தினம் உங்கள் பாசத்தை பொழிவீர்கள் எனது அப்பாவின் உறவுகள் அவரின் இறப்புக்கு பின்னர் தூரமாக என்னால் பார்க்கப்பட்ட தருணங்களிலும் என்னை நீங்கள் தினம் தினம் தேடியதை நானறிவேன் என் திருமணத்தை நீங்களும் உங்கள் சகோதரர் , சகோதரிகள் உங்கள் பிள்ளைகள் என் மச்சான்கள், என் மாச்சாள்கள் , என் அண்ணன்கள், என் சகோதரிகள் என என்னை அரவணைத்து நடாத்திய தருணங்களில் உங்கள் பாசம், நான் தொலைத்த பெரிய இடைவெளிக்காய் வருந்திய தருணங்கள் சொல்லி மாளாது... பெரியத்தை உங்கள் அரவணைப்பில் நான் என் குடும்பத்தோடு வாழ வேண்டும் என கனவு கண்ட வேளையில் உங்கள் பிரிவை எப்படி என் மனம் ஏற்கும் தொலைத்த இடத்தில்உங்களை தேடியபடி அன்பு மருமகன் திருநாவுக்கரசு கயலவன் 🙏