2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராசா வேதநாயகி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக
கூடிநாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!
பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்துசத்துள்ள
உணவுவகைகளை அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு
சென்றது எங்கே அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்