Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 AUG 1938
இறப்பு 14 MAY 2022
அமரர் சிவராசா வேதநாயகி (சின்னம்மா)
வயது 83
அமரர் சிவராசா வேதநாயகி 1938 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராசா வேதநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 03-05-2023

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்
ஒருமுறை வந்து எங்கள்
துயர்துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!

என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
எனை என்றும் வாட்டுதையோ !
ஆறா துயர் தந்து மீளாத்துயில் கொண்டாய்
வருவாய் என்று நான்
காத்திருந்த காலங்கள் இன்று
ஆண்டு ஒன்று ஆகியது

ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ !

கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலன் அவன் அழைத்து விட்டான்
உங்கள் கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாது
கலங்கி நிற்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
     இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!        

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 15 May, 2022
நன்றி நவிலல் Mon, 13 Jun, 2022