Clicky

தோற்றம் 08 MAY 1961
மறைவு 12 JUL 2023
திருமதி சிவரஞ்சன் அருள்ராணி
ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியர் யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி, யா/மட்டுவில் கமலாசினி மகா வித்தியாலயம்
வயது 62
திருமதி சிவரஞ்சன் அருள்ராணி 1961 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

1975 NCGE BATCH,BREAKFAST CLUB,DEEP - DRIEBERG COLLEDGE 13 JUL 2023 United Kingdom

கண்ணீர்க் காணிக்கை அமரர் அருள்ராணி 12.07.2023 ஓ காலமே என்ன கொடுமை இது ஓய்ந்ததுவே எங்கள் ஆற்றல் மையம் அண்மையில்தானே எம்மை உன் இல்லத்திற்கு அழைத்து டிறிபேர்க் கல்லூரியின் வளர்ச்சி தரம் உயர்ச்சி போன்ற பல்வேறு விடயங்களை கலந்தாலோசித்தாய் மாணவ மணிகளை மணிமகுடம் ஏற்றுவதற்கு உந்துசக்தியாய் இயந்திரமாய் அயராது இயங்கிக்கொண்டிருந்த வித்தகியே உத்தமியே 24/7 குழுமத்தையும் DEEP குழுமத்துயும் அழகுறச் செதுக்கிக்கொண்டிருந்த மாபெரும் சிற்பியே பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் எமையெல்லாம் ஓரணியாய் கல்லூரியெனும் தேரினிலே ஏற்றி பயனிக்கச்செய்த சாரதியே பிள்ளையாய் மாணவியாய் விளையாட்டு வீராங்கனையாய் மாணவத் தலைவியாய் அன்னையாய் ஆசிரியையாய் சமூக சேவகியாய் இன்னும் பற்பல நேர்மறை பாத்திரங்களை அழகுற ஏற்று புதிய மாற்றங்கள் வேண்டி நகர்த்திய ஆற்றல்மிகு நாயகியே அருளே தங்கள் சிந்தனை நிறுத்தமறிந்த எங்கள் நெஞ்சங்கள் வெந்துமடிந்தனவே நண்பியே நேற்றுத்தானே பிறந்தநாள் பாக்கள் பாடினோம் இன்று ஒப்பாரிப்பாடலா ஒப்புக்கொள்ள மறுக்கின்றதே மனம் அன்னையே அருளே விட்டுச் சென்ற செயல்கள் யாவும் இட்டு நிரப்ப முடியாது எங்களுக்குள் முட்டிமோதுகின்றனவே இராணியே தங்கள் சிந்தனைகள் யாவும் செயல்வடிவமாகி உயர்நிலையடையும் அமைதியாய் உறங்குங்கள் தாயே தங்கள் பாதங்களுக்கு கண்ணீர்க் காணிக்கைகள் துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர் உற்றார்உறஙினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.