யாழ். சாவகச்சேரி சிவன்கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவரஞ்சன் அருள்ராணி அவர்களின் நன்றி நவிலல்.
அம்மா உன் அருளால் ஒளிரூட்டி
எம் இலக்கை எமையே அடைய வைத்தாய்
இலக்கினையடைந்த இன்பம் உனைச்சேர
திரும்பினால் மறைந்தாய், நீ எங்கே அம்மா!
கண் அயர்ந்து கதிரவன் வந்த பின்னும்
என் இமைகள் மலர மறுப்பது ஏனோ
அம்மா உன் அழகு முகமே ஆதவனாய்
கனவில் காண ஏங்கும் ஏக்கம் தானோ
அம்மா உன் மடி சாய்ந்து
அனு தினமும் என் கதை சொல்வேன்
எனை அழைக்கும் உன் செல்ல ஓசை கேட்க
என் ஏழேழு ஜென்மம் காத்திருப்பேன்
நம் நால்வர் நன்னெறி அடைய
உன் கஸ்டங்கள் களைந்தாய் சிறு புன்னகையில்
எம் செல்லமாய் உனைக் காண கண்ட கனவெல்லாம்
விழியெதிரே தடம் மறைந்தது தரையடியில்
உன் வாழ்வின் அர்த்தத்தை நிரப்பினாய் அர்ப்பணிப்பால்
மாணாக்கர் மனதில் பதிந்தாய் மாண்புமிகு தெய்வமாய்
உன் பாதம் பார்த்து உருகிய பூமித்தாயே அழைத்தாள்
நிம்மதியாய் உறங்கு என் செல்ல அம்மா....
அன்னரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 12-08-2023 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சாவகச்சேரி சிவன்கோவிலடி கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அன்றையதினம் அனைவரையும் அவரது ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்காெள்ளவும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.