Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 08 JAN 1977
இறப்பு 13 FEB 2023
அமரர் சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ்
வயது 46
அமரர் சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ் 1977 - 2023 வியாபாரிமூலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மீளாத் துயரிலும் ஆறாத்துயரிலும் எம்மை
ஆழ்த்திச் சென்றீரே!
கலையாத உம் நினைவுகளால் உதிரும் கண்ணீர்
பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்...
இவ்வண்ணம் அன்பின் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்

எங்கள் அன்புத் தெய்வம் அமரர். சிவப்பிரகாசம் நித்தியபிரகாஷ் அவர்கள் கடந்த 13-02-2023 அன்று எம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்த வேளை எமது இல்லம் நாடி வந்து எம்முடன் இருந்து பக்கபலம் வழங்கியவர்கள், இறுதிச் சடங்கில் பங்கு கொண்டவர்கள், எமக்கு ஆகாரங்கள் வழங்கியவர்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியவர்கள் மேலும் பல வழிகளிலும் உதவி புரிந்த உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி எதிர்வரும் 15-03-2023 புதன்கிழமை அன்று எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதோடு, அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:
பிரதான வீதி,
செங்கலடி

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.