Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 26 APR 1956
மறைவு 06 FEB 2023
அமரர் சிவப்பிரகாசம் மகேந்திரராசன் (பெரியம்பி)
வயது 66
அமரர் சிவப்பிரகாசம் மகேந்திரராசன் 1956 - 2023 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் மகேந்திரராசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் நாம் தவிக்கின்றோம்!

எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின்
உறைவிடமாய் வாழ்வின்
வழிகாட்டியாய் எம்முடனே!

எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
 கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உமது அன்பாலும் அரவணைப்பாலும்
உமது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு
கூறும் ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 08-03-2023 புதன்கிழமை அன்று ந.ப 11:30 மணியளவில் இல்லத்தில் நடைபெறும். அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 11-03-2023 அன்று 12:00 மணிமுதல் 05:00 மணிவரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்வில் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

மண்டபம் :
50 Rue de Torcy,
75018 PARIS .
Métro:- Marx Dormoy N°- 12

இங்ஙனம், குடும்பத்தினர், மனைவி,பிள்ளைகள்
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்