1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவப்பிரகாசம் மகேந்திரராசன்
(பெரியம்பி)
வயது 66

அமரர் சிவப்பிரகாசம் மகேந்திரராசன்
1956 -
2023
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் மகேந்திரராசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-01-2024
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும்
உம் நினைவால் வாடுகிறோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள் இன்று
தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
வருடங்கள் ஒன்றானாலும்
ஆறாது உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி இன்றும்
எங்கள் விழிகளில் வழிகின்றதே
கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்