யாழ். கொக்குவில் கிழக்கு புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ontario Mississagua ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்களே
அப்பா...!
கண்ணிறைந்த நீரோடு
உங்கள் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்
எங்கு சென்றீர்கள்?
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க உங்கள் நினைவுகள்
இருந்தால் போதும் தந்தையே!
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
மூன்று ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் என்ற உணர்வுடனும்
உங்கள் செயல் நினைவுகளையும் எத்தனை வருடங்கள்
சென்றாலும் மறவோம் அப்பா அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.