Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1965
இறப்பு 31 DEC 2022
அமரர் சிவனடியான் தயாளினி 1965 - 2022 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவனடியான் தயாளினி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....

காற்றாக சுவாசமாய் எம்முள்ளே வாழ்பவளே
நாம் வீற்றிருந்து விளக்கேற்றி
காத்திருப்போம் உனக்காய்
கண்களிலே காட்சி தர வருவாயா?

இன்றோடு மூன்றாண்டுகள் கழிந்தாலும்
உங்கள் நினைவுகளுடன் மறக்க
முடியாமல் மனதில் நிறுத்தி வாழ்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்