யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவனடியான் தயாளினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-01-2025
ஆண்டுகள் இரண்டாகியும் ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும் மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடிநாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ எங்கள் தெய்வமே!
பத்துமாதங்கள் பக்குவமாய் வயிற்றில் சுமந்து
சத்துள்ள உணவுவகைகளை அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது எங்கே அம்மா!
மீண்டும் உன்
கருவறைக்குள்
எனக்கோர் இடம் கிடைக்குமா?....
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இராண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம்
அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!