யாழ்ப்பாணம் நீர்வேலியை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டு சீரும் சிறப்புடனும் வாழ்ந்துவந்த திரு. சபாரத்தினம் சிவலிங்கம் (சின்னையா) அவர்கள் வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியினை மனம் கலங்கியவாறு உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். உறுதியுடனும், துடிப்புடனும் நமக்கெல்லாம் வழிகாட்டி நின்ற அண்ணன் சாய்ந்தது கண்டு அனைவரும் ஆறாப்பெருந்துயரில் நிற்கின்றறோம். அன்னாரின் இழப்பினால் துயருற்றிகுக்கும் அவரது குடும்பத்தினருக்கு தோழமையோடு நாம் அனைவரும் நிற்போம் என ஒற்றுமையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அண்ணனே, உங்களை நினைத்து கவிதை எழுத முயற்சித்தேன். வந்தது கவிதை அல்ல, மாறாக கண்ணீர் துளிகள். காரணம் நீங்கள் எங்களுடன் இல்லை அண்ணா, இன்னும் நீங்கள் இறந்ததை எங்களால் நம்ப முடியவில்லை அண்ணனே. காலம் நம்மை பிரித்துவிட்டது. ஆனால் உங்கள் நினைவுகள் மட்டும் எங்களை விட்டு பிரிக்க முடியவில்லை அண்ணா. என்றும் நீங்கா உங்கள் நினைவில் வாடும் உங்கள் அன்புத் தம்பி. சாவு ஒன்றும் புதியதில்லைதான். இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள் தினம் தினம். இறக்கிறார்கள் தினம் தினம். இறந்தும் பிறக்கும் ஜீவ உயிர் கொண்ட சிறந்த மனிதநேயம் கொண்ட உயர்ந்த பண்பாளர் நீங்கள். உங்களுக்கு ஏது மரணம்? என்னில்... எழில் தமிழில்... தமிழர்தம் நெஞ்சில்..என்றும் என்றும் என்றென்றும் வாழ்வீர் வாழ்வீர் வாழ்வீர் எங்கள் அண்ணர். Langes, FCPA, FCGA