?"'நல்லவனே எங்கள் நண்பனே"? நீ. மறைந்திட்ட செய்தியை கேட்டவுடன் ஒரு பேரிடி எம் நெஞ்சில் விழ்ததெடா! உன்னை பெற்ற தாயைப்போல் எம் உள்ளம் துடித்ததெடா! அந்த சோகத்தை சொல்லிஅழ வார்த்தைகள் இல்லையடா! செய்வது அறியாது திகைத்து நின்று அந்த ஆண்டவன் திருவடி சரண் புகுந்தோம். சித்திரை நிலவாய் இருந்தவனே! சிந்தனை சிற்பி யாய் திகழ்ந்தவனே! சித்தத்தில் உயர் பண்பினை கொண்டவனே! சிவலிங்கமே எமை மறந்து நீ எங்கு சென்றாய். உன் மனைவியின் பிறந்த தினம் கொண்டாட உன் மக்களுடன் மறைந்திருந்து மகிழ்ச்சியுடன் காத்திருந்தாய்! அந்த மகிழ்ச்சியை கண்டு பொறுக்காத காலன் அவன் சொன்ன கதை கேட்டு அவன் பின்னால் நீ சென்றாயோ! உன் மனைவி அமுதாவை அளவிட்டு சென்றாயோ! உன் மக்களையும் மறந்து விட்டுச் சென்றாயோ! உன் உற்ரவரை உறவினரை உறைய விட்டு! பத்திரமாய் இது அமுதா என்று சொல்லி நீ பரலோகம் பார்த்துவர சென்றாயோ. அளவிடமுடியாத அன்புடனே ஆனந்தமாய் எம் இல்லம் வருவாயே! உன் குறை, நிறை மகிழ்ச்சிகள் பகிர்ந்திடவே உரிமையுடன் உன்னை படிப்பித்த டீச்சர் ஆம் எம்தாயிடம் வருவாயே! சிந்தனை பூத்த சிரிப்புடனே சிற்றுண்டியுடன் சிங்காரமாய் எமைதேடி வருவாயே! எம் குடும்பத்தில் ஒரு அங்கமாய் திகழ்ந்தவனே! எங்கள் நீர்வேலி பெற்றெடுத்த பெருந்தகையே!ஆண்டவன் திருவடி சென்று நீ அடைந்தாலும்! நீங்காத உன் நினைவு எம் நெஞ்சிநிலே வட்டமிடும். நீர்வேலி காலம்சென்ற அந்தோனிப்பிள்ளை அழகம்மா ஆசிரியர் குடும்பத்தினர் சார்பில் மகன் மதிதயன் அந்தோனிப்பிள்ளை.