2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். செம்பிமா வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகாமிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை பிரிந்து
சென்று
இன்றோடு ஆண்டு
இரண்டு ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும்
எங்கள்
மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர்
கடலில்
மூழ்க விட்டு எங்கு
சென்றீர்கள் அம்மா
கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எனை இங்கு
எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்றுவிட்டாய்
உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை
அம்மா என்றழைக்க அம்மா
நீங்கள்
இல்லையே அடிமனதில்
வலி துடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்!
என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்..!!!!
தகவல்:
குடும்பத்தினர்