இன்று, 18/02/2023, காலை எனது,உறவினர், நண்பன், வகுப்பு தோழன் (ஆம், இளம் பராயத்திலிருந்தே 8 ஆம் வகுப்பு வரை பாடசாலையில் ஒன்றாக கல்வி கற்றோம்) சிவாவின் பிரிவை வாசித்து அதிர்ச்சியடைந்து, மிகவும் கவலைப்படுகின்றேன். நான் வேறு பாடசாலைகளுக்கு சென்றதால் இவரின் தொடர்பு குறைந்தது. பாடசாலையில் இவர் ஒரு சிறந்த மாணவன். கோப்பாயில் இவரது வீட்டு முற்றத்தில் சக நண்பர்களுடன் கிளித்தட்டு, கெந்தல், விளையாடுவோம். இவர் நன்றாக நகைச்சுவை செய்வார். விழுந்து விழுந்து சிரிப்போம். பின்பு ஓரிரு சந்தர்பங்களில்த்தான் நாம் சந்திக்கக்கூடியதாக இருந்தது. இவரது குடும்பத்தினர் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்!
Please accept our condolences. We were truly sorry to hear of the loss of Siva Sivananthan. May God give you the comfort. Vincent Jasintha