*ஆனந்தன் மாஸ்ரருக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி* மாலையில் வாடிவிடும் மலருக்கும் - ஓரு மாலையில் இணைந்து மணம் வீச ஆசை வரும் ஓடையில் வளைந்தோடும் நீருக்கும் - ஒரு சமுத்திரத்தைத் என்றேனும் தொட்டுவிட ஆசை வரும் நீயோ ஆசைகளை அடக்கி அகிலம் வென்றாய்! சாமானியனாகப் பிறந்து, சர்வகலாசாலை புகுந்து, சம்சாரியாகாத நிலை கொண்டு சரித்திரத்தில் இடம் பிடித்தாய்! மூச்சுக்கு மூச்சாய் முழுமனதாய் நம் படை வெல்ல, முயன்று வாழ்ந்தாய்! இல்லங்கள் தோறும் நாம் இலக்கியம் பேசிய காலம் - நீ உள்ளங்கள் தோறும் நல்லென்ணம் கண்டாய் வசந்தகாலங்களில் நம் வட்டத்திற்கு வடம் பிடித்து வளம் செய்தாய் நம் மண்ணின் வாசனையை இட்டமுடன் பகிர்ந்து கொள்வாய் உன் பாடல்களில்….உயிர் இருக்கும்! சிறியண்ணாவின் சிஷ்யனாக சிந்தையில் சிம்மாசனம் கொண்டாய் ஆசிரியனாய் இருந்தும் எம்மோடு மாணவனாய் மனம் நிறைத்தாய் கள்ளமில்லா நல்மனமே! வெள்ளமாய் நாம் கதற மெள்ள விட்டுச் சென்றதேனோ? வீடுபேறு கொண்டதேனோ? உன் இழப்பை சாதாரண உயிரிழப்பாக நாம் கடந்து செல்ல முடியாது தேசம் நோக்கிய காதலில் தன் வாழ்நாளை நகர்த்திய ஓர் தேசாபிமானியின் பேரிழப்பாகவே பார்க்கிறோம் உங்கள் கனவுகள் மெய்ப்படும் காலம் கனியும் அது வரை உங்கள் உணர்வோடு பயணிப்போம். ஓம் சாந்தி🙏 -துயர் சுமந்த நினைவுகளோடு பிறேம்ராஜ் (வேலன் இலக்கிய வட்டம்)
We extend our deepest condolences to you. May you find strength and comfort during this difficult time. you have always been a dear well wisher to us, and we hold you in our thoughts.😭😭😭