Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 13 JAN 1951
இறப்பு 07 SEP 2025
திரு சித்தார் சின்னையா ஆனந்தம்
வயது 74
திரு சித்தார் சின்னையா ஆனந்தம் 1951 - 2025 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். தல்லையப்புலம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தார் சின்னையா ஆனந்தம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அமரர் CS ஆனந்தம் அவர்களின் ஆளுமையும், அற்பணிப்பும் நிறைந்த வாழ்க்கை வரலாறு,

அமரர் CS ஆனந்தம் அவர்கள்
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை
அரசியல் பணியைகளின் 
ஈடுப்பட்டு இருந்தார்.

எமது விடுதலை அணியின்
முதல் பத்து அங்கத்தவர்களில்
இவரும் ஒருவர்
எனத் தன்னை அடையாளபடுத்த இவரது வரலாறும் இருந்தும்.
இறுதிநாள்வரை தனது பணியை
 வெளியில் காட்டாது வாழ்ந்து,
இருட்டில் பயணித்தார்.

இவரது அரசியல் பயணத்தினை மதித்து
இவரது மறைவின்பின்
"தேசத்தின் காற்று" என விருது வழங்கி கெளரவித்தார்கள்.

இந்தவிருதின் மதிப்பானது,
மூத்த உரிமைப்போராட்ட போராளிகளுக்காக
வழங்கப்பட்ட"தேசத்தின் குரல்" விருதுக்கு நிகரானது
என இதனை வழங்கியவர்கள்
கருத்து தெரிவித்தார்கள்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து அத்தனை அன்புள்ளங்களுக்கும், அமைப்புகளுக்கும், உறவுகளுக்கும், நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவைமூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் அன்னாரின் உறவுகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


*************************************************************

31ம் நாள் நினைவஞ்சலி அழைப்பிதழ் :

அன்னாரின் 31ம் நாள் நினைவானது 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு சிவனுக்கு அபிஷேகம், ஆராதனையுடன் ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து 12:00 மணிக்கு ஐயப்பன் ஆலத்தில் மதிய பூசைகள் நடைபெறும்.

அதன் பின்னர் பி.ப 12:30 மணிக்கு மலர் வணக்கம் மற்றும் நினைவுவிருந்தும் நிகழ்வுகள் இடம்பெறும். பி.ப 01:00 மணிக்கு  நினைவுக்கூட்டம் ஆரம்பம் ஆகும்.
இந்நிகழ்வு பி.ப 03:00 மணியளவில் நிறைவுடைய உள்ளது.

இந்த நினைவு நிகழ்வில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உடன் இவர் நேசித்த அமைப்பினர் அனைவரையம் கலந்துக்கொள்ளுமாரு அன்புடன் வேண்டுகின்றோம்.

Car Park : Harrow Leisure Center Car Park, Harrow HA3 5BD Pay by phone using the PayByPhone app or calling 020 8039 1101 and entering the location code 802078. (Please register online or by phone to get 3 hours free parking) 5-7 minutes walking distance to Ayyappan Temple

Nearest Station: Harrow & Wealdstone (Tube & National Rail) Temple is only 5 minutes from the station

Buses : 140, 182, H10, H9

இங்ஙனம், உறவுகள்

தொடர்புகளுக்கு

திரு கவி வீரவாகு - குடும்பத்தினர்
திரு அமிர்தன் இராசகாரியர் - குடும்பத்தினர்
திரு செல்வா செல்லத்துரை - குடும்பத்தினர்
திரு பேரம்பலம் அன்பழகன் - குடும்பத்தினர்
Tribute 36 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 10 Sep, 2025