யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மதவடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரநாதர் திசைவீரசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால் அப்பா என்று
உணர்கின்றோம்...
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
"எப்பொழுது வருவீர்கள்?" என்று
எதிர்நோக்கி அழைத்த
உங்கள்
அன்புச் சத்தம்
இன்று ஓய்ந்துபோனதே!
வீட்டின் வாசலில் நின்று
புன்னகையோடு எங்களை
வரவேற்க
இன்று நீங்கள் இல்லையே அப்பா!
உங்களின் உழைப்பும், உறுதியும்
எங்கள் வாழ்க்கைக்கு என்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா!
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்....!!!