யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை யோகலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா..
நாட்கள் 31 ஆனாலும் அம்மா ஆறாது
உனது பிரிவுத்துயர் நாம் புலம்புகின்றோம்!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உன்னைப்போல் அன்பு கொள்ள
யாரும் இல்லையே அம்மா!
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அம்மா!
அம்மா! அம்மா!
உன் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.