

யாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இமையாணன் கிழக்கு செம்பாட்டோலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை விசுவலிங்கம் அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவனேசராசா, சிவானந்தராசா, சிவலிங்கராசா, திருமங்களாதேவி, சசிகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமலர், இராஜேஸ்வரி, லலிதா, மகாதேவன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகம்மா பரஞ்சோதி, செல்லத்துரை கணேசலிங்கம், திலகவதி அச்சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நச்சுனாச்சினியனார், பரிமேளலகர், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, விபுலானந்த அடிகள், மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிசோர், கினேசன், பானுசன், விதுசன், ரேணுகா, அனோசன், மொனேஸ், லக்சியா, ராகேஸ், றோகித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சென்றுவாருங்கள் என்றும் என் உளம்வாழும் ஆசானே!!! பொன்னம்பல வித்தியாசாலையில் என் ஆரம்பக் கல்வியின் ஆசானாக விளங்கி எனக்கு அறிவொளி ஏற்றிவைத்த ஐயாவே! உங்கள் ஒவ்வொரு மாணவனும் உயர் குணங்கள் கொண்டு...