Clicky

பிறப்பு 28 FEB 1948
இறப்பு 28 AUG 2019
அமரர் சின்னத்துரை சற்குணசீலன் (சீலன்)
முன்னாள் தலைவர்- நடேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கம், தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் TSSA, முன்னாள் பொருளாளர்- ஸ்கொட் நிறுவனம்- SCOT, தலைவர்- தையிட்டி மக்கள் ஒன்றியம், Bee-One நிர்வாக அதிகாரி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்
வயது 71
அமரர் சின்னத்துரை சற்குணசீலன் 1948 - 2019 தையிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Yoga Thinesh 03 SEP 2019 United Kingdom

#இழப்பு ஆர்வத்துடனும் துடிப்புடனும் பணி செய்த சீலன் அண்ணா.. #தமிழ் #பாடசாலைகள் #விளையாட்டுச் சங்கத்தில் இணைந்த நாள்முதல் அன்புடன் பழகிய #சீலன் #அண்ணா.... தலைவராகவும் பல பொறுப்புவாய்ந்த பதவிகள் வகித்தவராகவும நிறைவான நாள் வரை நிர்வாக உறுப்பினராகவும் சேவையாற்றிய சீலன் அண்ணா.. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற #TSSA இன் கோடைகால நிகழ்விலும் மனம் உடல் சோராது எடுத்த தன் பணியை சிறப்பாக செய்த சீலன் அண்ணா.... இளையவனாக நான் பொறுப்பு வாய்ந்த பணியை எடுக்கும் போதும் இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து ஈடுபட்ட ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் ஊக்கமும் உத்வேகமும் அவ்வப்போது பாராட்டும் தந்த சீலன் அண்ணா ... நீங்கள் இப்போது எங்களுடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை..... ஒருபணியை நிறைவு செய்த பின் "All Done " என்று நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்தி இனி எங்களுக்கு வரமாட்டாது என்பது நினைக்க அது பெருங்கவலை .... முந்தைய நாள் அனுப்பிய குறுஞ்செய்திதான் கடைசி என்பது எங்களுக்கு எப்படித்தெரியும்? விளையாட்டுத் துறைக்காக பணி செய்த உங்களை விளையாட்டின்போதே எங்களை விட்டுப்பிரிந்து விட்டீர்களே சீலன் அண்ணா..... தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் TSSA UK நடப்பு செயல் உறுப்பினரை இழந்து தவிக்கிறது...??? நீங்கள் சொன்ன ஊக்கமொழிகளும் பாராட்டிய தருணங்களும் என்றும் நினைவிலிருக்கும். என்றும் அது ஊக்கமளிக்கும். ஆனால் சீலன் அண்ணா இனி வரமாட்டார் என்ற விடயம் கவலையளித்துக்கொண்டேதானிருக்கிறது?? #கண்ணீர் #அஞ்சலிகள் #ஆத்மா #சாந்தி... Yoga Thinesh

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 03 Sep, 2019