Clicky

பிறப்பு 13 SEP 1958
இறப்பு 30 OCT 2020
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்
வயது 62
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம் 1958 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
13 SEP 1958 - 30 OCT 2020
Late Sinnathurai Pararajasingam
பராவின் இழப்புச் செய்தி கேட்டுப் பரிதவிக்கிறது மனம். எல்லாக் கொடுமைகளிலும் மிகப்பெரும் துயரம் கூடப்படித்த பள்ளித் தோழரை இழக்கிற துயர்தான். எல்லோரையும் அனுசரித்துப் போகின்ற ஆளுமை மிக்க நல்லமனிதன்.பணிவும் கனிவும் பாசமும் வழிந்தோடும் அவரது குரலால் எல்லோரையும் கட்டிப் போடும்வல்லமையாளன் இனி இல்லை என்பது பெருந்துயர். தீவக வளர்ச்சிக்காய் அயராது உழைத்த அவரது மூச்சுஓய்ந்து போனது என்பதை அவரோடு பழகிய எவரும் இலேசில் ஒத்துக் கொள்ள முடியாது.கனேடிய நெடுந்தீவுஒன்றியத்தின் ஆணிவேராக நின்றுழைத்தவர்.ஈழதேசியத்திலும் தாயகத்திலும் மிகுந்த பற்றுறுதி கொண்டவராகவிளங்கினார். தாயக வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகளைத் தொட்ட கனேடிய நெடுந்தீவு மக்கள்ஒன்றியத்தின் 25 ஆண்டு விழாவை அதன் நிர்வாகத் தலைவராக இருந்து கோலாகலமாக கனடாவில்கொண்டாடியவர். இந்த விழாவிற்கென தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலுருந்தும் தாயகஉறவுகளை அழைத்துச்சிறப்பித்தவர். எம் தீவகத்தின் மறக்கவியலாப் பெருந்துயரான குமுதினிப்படுகொலையில் உயிர்நீத்த உறவுகளுக்காக ஒவ்வோரு வருடமும் மே 15 ல் ஆத்மார்த்த அஞ்சலிப் பூசையைதன்னார்வமாக நடாத்தி வருகின்ற மானிட நேயன் இவரது இழப்பு மிகுந்த துயர் தருகிறது. அவரை இழந்துதவிக்கும் அவரது அருந்துணைவியார் அருமைப் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரை எந்த ஆறுதல்வார்தையைக் கொண்டு நம்மால் தேற்றிட முடியும்? நட்பென்னும் உணர்வால் எம் உதிரமெங்கும் ஊறிய உனக்கு மரணம் என்றுமில்லை நண்பனே!! என் ஆத்மார்த்த அஞ்சலி !!
Write Tribute