திதி: 15-11-2024
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை பரராஜசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
என்னை ஏன் தனியாக தவிக்க வைத்தாய்
நீமட்டும் கல்லறையில் மீளாநித்திரையில்
நானோ உன் நினைவுகளோடு வேதனையுடன்
தனிமையில் தவித்து மாள்கிறேன்
அப்பா உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
பாலகராக இருந்த நாம்
பருவ வயதடைந்து வளர்ந்து நிற்கின்றோம்
கூட நின்று தோள் தட்ட
துணையாக நீங்கள் இல்லையேயப்பா?
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்..!