

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை 36வது லேனில் அமைந்த "மகாலட்சுமி மஹால்" அவரது இல்லத்தை வசிப்பிடமாகவும், அதன்பின் லண்டன் Pinner ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மகாலட்சுமி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான மொழிபேசி உறவுகளை
அரவணைத்தீர் அம்மா என்ற
சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
எப்பொழுதும் மழைத்தூறலாய்
உங்கள் நினைவு..!
எங்கள் இதயங்கள் நனைந்த
காடாய் கிடக்கின்றன!
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த
நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா.
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை 8 அல்ல பல நூறு
ஆண்டுகள் சென்றாலும்
மறக்கமாட்டோம் என்றென்றும்
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி ஏங்குகின்றோம்
உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை
மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அம்மா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பிறந்த நாள் வாழ்த்துகள் மூர்த்திஅம்மா. 100 வருடங்கள் ஆனாலும் உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்பது பிராத்தனைகள்.