யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை 36வது லேனில் அமைந்த "மகாலட்சுமி மஹால்" அவரது இல்லத்தை வசிப்பிடமாகவும், அதன்பின் லண்டன் Pinner ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மகாலட்சுமி அவர்களின் 100ம் ஆண்டு பிறந்தநாள் நினைவு பகிர்வு.
அன்னார், சின்னத்துரை தெட்சணாமூர்த்தி அவர்களின் அருமைத் தாயாரும் ஆவார்.
100வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் உங்கள் நினைவில் உங்கள் பிள்ளைகள்,
மருமக்கள்,
சகோதர, சகோதரிகள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும்
உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும்
எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அம்மா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் அரவணைப்புக்கும் நிகருண்டோ இவ்வுலகில் அம்மா!
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!
அம்மா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.....
பிறந்த நாள் வாழ்த்துகள் மூர்த்திஅம்மா. 100 வருடங்கள் ஆனாலும் உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்பது பிராத்தனைகள்.