Clicky

பிறப்பு 21 JAN 1944
இறப்பு 09 MAR 2019
அமரர் சின்னத்துரை கமலநாதன்
வயது 75
அமரர் சின்னத்துரை கமலநாதன் 1944 - 2019 நுணாவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 19 MAR 2019 Germany

காலம் எமைக் கடந்துபோகும் வேளையில் எம்மிடையே, குறிப்பாகப் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கான கற்றல் வள நூலாக்கத்தில் முதன்மையானவராகத் திகழ்ந்த மதிப்பிற்குரிய முனைவர் உயர்திரு சி.கமலநாதன் அவர்கள் ஒரு அழியாத ஒளிச்சுடர். இன்னும் பல்லாண்டுகளல்ல, தமிழ் உள்ளவரை உங்கள் செயல்கள் வாழும். அதனால் தமிழுள்ளவரை வாழ்வீர்களையா! தமிழையும் தலைவனையும் சுவாசித்த நேசித்த ஒரு பெருந்தகையை, எளிமையின் எழிலைத் தமிழுலகு இழந்து தவிக்கிறது. உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் தமிழ் அழுகிறது. உங்கள் பணிதொடர்வோரால் உங்கள் ஆன்மா உலவட்டும் தமிழுலகில். அழியாத புகழுடன் வாழும் புலவரே சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்! அறிவுதரும் அற்புதப் பண்பினைப்பூண்டவராய் அரவணைக்கும் உங்களை என்றும்மறவாது தமிழ் உலகு. மா.பாஸ்கரன் யேர்மனி

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 16 Mar, 2019